General13 September 2026

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகள்' திருட்டு: ஊழியர் உட்பட இருவர் கைது

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை' (Smart keys) திருடி விற்பனை செய்த சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலிருந்து ஸ்மார்ட் சாவிகளைத் திருடிய துறைமுக ஊழியரை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த ஊழியர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு சாவியை 6000 ரூபாய் முதல் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்தது.

அத்துடன் பல மாதங்களாகச் சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்து அந்த ஊழியர் 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குருநாகலில் வசிக்கும் தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த ஸ்மார்ட் சாவிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இருவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை செப்டம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes