General13 September 2026

தீவிரமடையும் 'எல் நினோ' : உலகம் இதுவரை பார்க்காத கடுமையான வெப்பநிலை - வெளிவந்த புதிய அறிக்கை!

2026ஆம் ஆண்டைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டும் வரலாற்றில் மிகக் கடுமையான வெப்பம் நிலவும் ஆண்டாக அமையக்கூடும் என ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை காணப்படுவதுடன், 2027ஆம் ஆண்டிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும் என்றும், அது இதுவரை பதிவானவற்றில் மிகவும் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக அமையக்கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் உலகின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes