General13 September 2026

அநுராதபுரத்தில் சூடுபிடிக்கும் அரசியல் களம்! - மொட்டுவைத் தொடர்ந்து மேடையேறும் திசைகாட்டி!

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிகள் இன்று (13) அநுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.

இந்தப் பேரணிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இதன்படி, முதலாவது மக்கள் பேரணி பிற்பகல் 2.00 மணிக்கு கஹட்டகஸ்திகிலிய வாராந்த சந்தை மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பேரணி பிற்பகல் 4.00 மணிக்கு நொச்சியாகம, சின்ஹரகம மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரத்தில் தனது பேரணியை நடத்திய அடுத்த நாளிலேயே தேசிய மக்கள் சக்தியின் இந்த மக்கள் பேரணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes