இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார். இவரது இறுதிச் சடங்கு நேற்று (12) பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.
1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட சிவில் அதிகாரியும் செனட் சபை உறுப்பினருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாகப் பிறந்த மானெல் அபேசேகர, 1958ஆம் ஆண்டு வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.
அரச சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் காலத்தில், வெளியுறவுச் சேவையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.
ஜேர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய இவர், நாட்டின் சிறந்த தூதுவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.
1976ஆம் ஆண்டு 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் (Chief of Protocol) இவர் பணியாற்றினார்.
1970ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் பொறுப்பு அதிகாரியாக (chargé d’affaires) இவர் சென்றபோது, வானூர்தி நிலையத்துக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் பெண் தூதுவரை எதிர்கொள்வதில் பழக்கமில்லாமல் "வெல்கம், மெடம்-சேர்" என்று வரவேற்ற சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில், 2010ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட சுயசரிதைக்கு "மாஸ்டர்-சேர்" (Master-Sir) தலைப்பிட்டிருந்தார்.
மேலும், தாய்லாந்தில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானப் பணயக்கைதிகள் விவகாரத்தில், 40 மணி நேர பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது இராஜதந்திர பேச்சுவார்த்தைத் திறன் முக்கிய பங்கு வகித்தது.
இலங்கை வெளியுறவுச் சேவையில் பல பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதற்கு மானெல் அபேசேகரவின் ஆரம்பகாலப் பணி ஒரு முக்கிய முன்னோடியாக அமைந்தது.

Latest News
ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!
Local
15 September 2026
அணுசக்தி சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஈரானின் அணுசக்தித் தலைவருக்குத் தடை: அமெரிக்காவின் அழுத்தத்தால் விசாவை ரத்து செய்தது ஒஸ்திரியா!
Local
15 September 2026
போலந்து எல்லைக்கு அருகில் ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதலின் எதிரொலி: யுக்ரைனுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க நேட்டோ உறுதி!
Local
15 September 2026
இன்று பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு
Local
15 September 2026
தென் செங்கடலில் உள்ள ஹனீஷ் தீவுகளை ஹூதிகள் கைப்பற்றினர்: சவுதி வான் படைத் தளத்தின் மீது தாக்குதல்!
Local
15 September 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ.320 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
Local
15 September 2026
“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!
Local
15 September 2026
இங்கிலாந்திடம் 0-3 எனத் தொடரை இழந்த பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம்: WTC புள்ளிப் பட்டியலில் புள்ளிகள் குறைப்பு!
Local
15 September 2026
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் AI பங்குச்சந்தை வீழ்ச்சி: ஆசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!
Local
15 September 2026
ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீதான தாக்குதல்: சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதா?
Local
15 September 2026