செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை குறித்து "அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துக்களைப் பரப்புவதையும்", "தீங்கிழைக்கும் போட்டியையும்" நிறுத்த வேண்டும் என்று சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் Anthropic நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் (Dario Amodei) AI வளர்ச்சியில் சீனா முந்திச் செல்வதைத் தடுக்கும் வகையில் அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் மனிதகுல நன்மைக்கான முறையில் AI என்ற செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாக்குன் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக,அமெரிக்காவின் முன்னணி AI ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து அண்மையில் வெளியேறிய ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் (Jacob Coxon) உட்பட பல நிபுணர்கள் தற்போதைய வேகத்தில் AI வளர்ச்சி தொடர்ந்தால் அது மனிதகுல அழிவுக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தனர்.
இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.
AI போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உலகை ஆளுவார்கள் என்பதால் சீனாவை விட அமெரிக்கா இதில் வேகமாகவும் முன்னணியிலும் இருப்பதே தனது முதன்மை இலக்கு என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்தநிலையில், AI ஆபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.
இதற்கிடையில், அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள சந்திப்பில் AI தொடர்பான பேச்சுகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: 12 பேர் மருத்துவமனையில்!
Local
16 September 2026
அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்!
Local
16 September 2026
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்
Local
16 September 2026
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026
சூர்யா - ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
Local
16 September 2026
தாய்மாமனின் மாபெரும் பரிசு - மதுரை செல்கிறார் முதலமைச்சர் விஜய் - அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அதிஷ்டம்!
Local
16 September 2026