General15 September 2026

சேதமடைந்த ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு பதிலாக புதிய ஈட்டிகளை வழங்க நடவடிக்கை

இலங்கையை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த 5 ஈட்டிகளுக்குப் பதிலாக புதிய ஈட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

இன்று (15) காலை இலங்கைக்கு வருகை தந்தபோது, வானூர்தி மூலம் கொண்டுவரப்பட்ட ருமேஷ் தரங்கவுக்குச் சொந்தமான 5 ஈட்டிகள் உடைந்து சேதமடைந்தன.

தான் 92 மீற்றருக்கும் அதிகமான தூரத்தை எறிந்து சாதனை படைத்த ஈட்டிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக ருமேஷ் தரங்க தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த ஈட்டிகளின் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ருமேஷ் தரங்க தற்போது சம்பந்தப்பட்ட வானூர்தி சேவை நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes