அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாடு, மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, "ஒன்றிணைந்த எதிர்க்கட்சி" என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சியினரும் கவலை வெளியிட்டிருந்தனர்.
குறித்த பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா , தன்னை ஒரு "புலி" எனக் குறிப்பிட்டதுடன், "நரியை" ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலருக்கே இக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த போதிலும், மேடையில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசப்பட்ட போது அங்கிருந்த சில ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News
"அப்பா முதலமைச்சர்... விளம்பரத்தில் அரசியல் வேண்டாம்" – மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
17 September 2026
காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களில் சிக்கலா? : தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
Local
17 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
Local
17 September 2026
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!
Local
17 September 2026
ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Local
17 September 2026
இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
Local
17 September 2026
நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிய தம்புள்ளை நபர்: மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ எச்சரிக்கை!
Local
17 September 2026
இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது!
Local
17 September 2026
கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை: செப்டம்பர் இறுதியில் 7 புதிய வழித்தடங்கள் அறிமுகம்!
Local
17 September 2026
புதிய அமெரிக்க தூதுவர்: பிரதி பாதுகாப்பு அமைச்சரை முதன்முதலாக சந்தித்தார்!
Local
17 September 2026