General17 September 2026

கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை: செப்டம்பர் இறுதியில் 7 புதிய வழித்தடங்கள் அறிமுகம்!

கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை, செப்டம்பர் மாத பிற்பகுதியில் இருந்து விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பான புதிய வழித்தட வரைபடங்களையும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வகையில் 7 புதிய பேருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

திட்டமிடப்பட்டுள்ள 7 வழித்தடங்கள் (Routes):

CM 01: மாக்கும்புர – புறக்கோட்டை (Makumbura to Pettah)

CM 02: மில்லேனியம் சிட்டி – கொழும்பு கோட்டை (Millennium City to Colombo Fort)

CM 03: கடவத்தை – மாக்கும்புர (Kadawatha to Makumbura)

CM 04: தெமட்டகொட – பாணந்துறை (Dematagoda to Panadura)

CM 05: பத்தரமுல்லை – ஏகலை (Battaramulla to Ekala)

CM 06: கொள்ளுப்பிட்டி வட்டப் பாதை சேவை (Kollupitiya Circular Route)

CM 07: கஹதுடுவ – புறக்கோட்டை / SLIIT (Kahathuduwa to Pettah/SLIIT)

இந்த சேவைகளின் மூலம், மஹரகம, நுகேகொட, பத்தரமுல்லை, மாலபே, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் ஜா எல (Ja-Ela) உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் இணைக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், பேருந்துகள் இயங்கும் நேரம், கட்டண விபரங்கள் மற்றும் ஒவ்வொரு வழித்தடத்திற்குமான துல்லியமான ஆரம்பத் திகதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes