காவல்துறை நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக காவல்துறை தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழியில் காவல்துறை நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை, பிரதேச காவல்துறை நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 859 59 46, 071 859 59 47 மற்றும் 071 859 59 48 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
Latest News
"அப்பா முதலமைச்சர்... விளம்பரத்தில் அரசியல் வேண்டாம்" – மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
17 September 2026
காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களில் சிக்கலா? : தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
Local
17 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
Local
17 September 2026
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!
Local
17 September 2026
ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Local
17 September 2026
இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
Local
17 September 2026
நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிய தம்புள்ளை நபர்: மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ எச்சரிக்கை!
Local
17 September 2026
இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது!
Local
17 September 2026
கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை: செப்டம்பர் இறுதியில் 7 புதிய வழித்தடங்கள் அறிமுகம்!
Local
17 September 2026
புதிய அமெரிக்க தூதுவர்: பிரதி பாதுகாப்பு அமைச்சரை முதன்முதலாக சந்தித்தார்!
Local
17 September 2026