General17 September 2026

22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் டித்வா புயலை விடப் பேரழிவை ஏற்படுத்தும் - சஜித் சாடல்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை விட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் திட்டத்திற்கான நிதியைத் திரட்டும் நிகழ்வொன்று வத்தளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தச்சட்டமானது நாட்டின் சட்டமன்றம், நிறைவேற்றுத் துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று துறைகளையும் பலவீனப்படுத்தும் என அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைத்து, நாட்டில் ஒரே கட்சி ஆட்சியை நிறுவுவதற்கே அரசாங்கம் முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீர்மின் உற்பத்தி மற்றும் ஏனைய முக்கிய துறைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்கும் வகையில், இயற்கை பேரிடர் முகாமைத்துவ முறைகளை அரசாங்கம் உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes