General18 September 2026

சாதாரண கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு குறித்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தை!

இலங்கையும் தாய்லாந்தும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

பேங்கொக்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், சாதாரண கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஏற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பற்றி விவாதித்துள்ளனர்.

இந்த விசா விலக்கு நடைமுறையானது பயணங்களை எளிதாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் இடையேயான பரிமாற்றங்களை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிலாளர் இயக்கம், கல்வி, கடல் பாதுகாப்பு மற்றும் கலாசார பரிமாற்றங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் அமைச்சர்கள் இருவரும் விவாதித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes