General18 September 2026

நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வனவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes