General18 September 2026

கைதுக்கு எதிரான சுரேஷ் சலேயின் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 27இல் உத்தரவு!

தனது கைது மற்றும் தடுத்து வைப்பு நடவடிக்கைகளைச் சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி (Leave to proceed) வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவை வரும் நவம்பர் 27ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes