பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய தெளிவுபடுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அந்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் அனைத்தும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் எனக் பொதுமக்கள் கருத வேண்டாம் என்றும் அதிகாரசபை எச்சரித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கூற்றுப்படி, பின்வரும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு மட்டுமே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்சக் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC): ரூ. 400 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)
டெங்கு NS1 என்டிஜென் பரிசோதனை: ரூ. 1,200 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)
கொவிட்-19 பிசிஆர் (PCR) பரிசோதனை: ரூ. 6,500 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)
கொவிட்-19 விரைவு என்டிஜென் (RAT) பரிசோதனை: ரூ. 2,000 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)
இவை தவிர்ந்து, பரப்பப்படும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram மற்றும் DEXA உள்ளிட்ட பிற பரிசோதனைகளுக்கான கட்டணங்கள், அதிகாரசபையின் உத்தரவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே பொதுமக்கள் சார்ந்திருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தெளிவுபடுத்தல்களுக்கு 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு நுகர்வோர் கோரப்பட்டுள்ளனர்.

Latest News
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026
24 H பார்சிலோனா கார் பந்தயம்: அஜித்தின் ‘RedAnt Racing’ அணி 2 ஆம் இடம் பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது!
Local
20 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைப்பு!
Local
20 September 2026
டிசம்பரில் நடைபெறுகிறது ஐபிஎல் 2027 ஏலம்: மைதானம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!
Local
20 September 2026
இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இவற்றையே செய்தது! அமைச்சர் சரோஜா பதில்!
Local
20 September 2026
சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும் ஒக்டோபரிலும் எரிபொருள் விலைக் கட்டுப்பாடு தொடரும்- ஜனாதிபதி
Local
20 September 2026
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
Local
20 September 2026
ஐ.நா பொதுச்செயலாளர் போட்டியிலிருந்து மிஷேல் பெச்லெட் விலகினார்!
Local
20 September 2026