General19 September 2026

கேகாலை விருந்தகமொன்றில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (18) இரவு நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்றபோதே, விருந்தக ஊழியர் ஒருவர் ஏர் ரைபிள் (Air Rifle) துப்பாக்கியால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes