General19 September 2026

‘Missile City’ முதல் ஏவுகணை தளங்கள் வரை ஈரானின் அடுத்த நகர்வு என்ன? இராணுவ சக்தி குறித்து புதிய கருத்து

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானின் இராணுவத் திறனில் பெரிய அளவிலான பின்னடைவு ஏற்படவில்லை என பேராதனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு இராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணை கட்டமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ‘Missile City’ என அழைக்கப்படும் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஈரானின் பாதுகாப்பு திறனில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நீண்டகால மோதல் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes