General19 September 2026

தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!

தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பேருந்துக்கு முறையான சேவை அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் நேற்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிற்றூந்தை ஓட்டிச் சென்ற தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக விஜேசிங்க (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes