General21 September 2026

முஸ்லிம் காங்கிரஸின் எம்.பியாகிறார் ஹபீப் ரிஃபான் - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் என்பவரை ஒரு வருட காலப் பகுதிக்கு பெயரிட்டுள்ளமை தொடர்பான அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் கட்சித் தலைமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுழற்சி முறையில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், ஒரு வருட காலத்துக்கு ஹபீப் ரிபான் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அப்துல் வாஸித் தனது பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியிருந்தது.
Related recommendation
Hiru TV News | Programmes