General21 September 2026

கிங் கங்கை மற்றும் குடா கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு!

கிங் கங்கையின் நீரேந்துப் பகுதி மற்றும் களு கங்கையின் குடா கங்கைக்கான துணை நீரேந்துப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதன்படி, குறித்த ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, உட்புற வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
மேலும், ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானமாக செயற்படுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes