இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளின் அதிகரிப்புடன் தொடர்புடைய இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களின் நிதிச் சார்ந்தத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு காவல்துறை இன்று ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அலட்சியமாக இருப்பதன் மூலம் கணக்கிலுள்ள பணத்தை மோசடிக்காரர்கள் திருடக்கூடும் என எச்சரித்துள்ள காவல்துறை பின்வரும் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளது.
வங்கி கடவுச்சொற்கள் (Passwords) அல்லது ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை ( (OTPs) குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உட்பட யாருடனும் பகிர வேண்டாம்.
கைபேசிகளுக்கு வரும் OTP எண்களைப் பகிர வேண்டாம். ஏனெனில் அவை கணக்குகளைத் திறப்பதற்கான முதன்மைச் சாவியாகச் செயல்படுகின்றன.
வர்த்தக நிலையங்கள் அல்லது உணவகங்களில் அட்டைகளைப் பயன்படுத்தும்போது, பரிவர்த்தனைகள் உங்கள் முன்னிலையிலேயே செய்யப்படுவதை உறுதிசெய்யவும்.
அட்டைகளை எவரும் வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர்கள்.
அட்டைகளை எவரும் வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர்கள்.
அட்டைகளின் பின்புறம் உள்ள மூன்று இலக்க CVV எண்ணை எவருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்.
கணக்குகளிலிருந்து பணம் பெறப்படும்போதோ அல்லது எடுக்கப்படும்போதோ உடனடியாகத் தெரிந்துகொள்ள குறுஞ்செய்தி (SMS) அறிவிப்பு வசதியைச் செயல்படுத்திக் கொள்ளவும்.
பணத்தின் பாதுகாப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் கரங்களிலேயே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
தொடர் நெருக்கடிகளால் இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம்: கேரள பல்கலைக்கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
Local
21 September 2026
அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!
Local
21 September 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!
Local
21 September 2026
ஜே.வி.பியின் கம்பஹா அலுவலக நிலையை மாற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
21 September 2026
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
Local
21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!
Local
21 September 2026
அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்: உயிரைப் பாதுகாக்க உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!
Local
21 September 2026
நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை: மக்களுக்கான அவசர எச்சரிக்கை!
Local
21 September 2026