தொழில்துறை மற்றும் முதலீடுகள் சார்ந்த அரச நிறுவனங்களுக்கு இடையிலான நிர்வாக மற்றும் ஒழுங்குமுறைத் தடைகளை நீக்கி, அனுமதி வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ViYASA எனப்படும் தேசிய வணிக வசதியளித்தல் மையம் நாளை (22) திறக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டலின் கீழ், நாட்டின் தொழில்துறைத் துறையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் புதிய வியாபாரங்களை ஆரம்பிக்கும் போதோ அல்லது நடத்திச் செல்லும் போதோ எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முதன்மை மையமாக இது இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிக நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை விரைவாகப் பெற்றுக்கொடுக்கச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் இணைந்து இந்த மையம் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
கொழும்பு 7, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள C-80 இலக்கக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொடவின் தலைமையில் இயங்கவுள்ளது.
தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக ஆகியோரின் பங்கேற்புடன் இந்தத் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
இதன்போது, பொதுமக்களும் முதலீட்டாளர்களும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள nbfc.presidentsoffice.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளமும் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

Latest News
தொடர் நெருக்கடிகளால் இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம்: கேரள பல்கலைக்கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
Local
21 September 2026
அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!
Local
21 September 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!
Local
21 September 2026
ஜே.வி.பியின் கம்பஹா அலுவலக நிலையை மாற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
21 September 2026
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
Local
21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!
Local
21 September 2026
அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்: உயிரைப் பாதுகாக்க உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!
Local
21 September 2026
நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை: மக்களுக்கான அவசர எச்சரிக்கை!
Local
21 September 2026