General21 September 2026

இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான கணிப்பீட்டின்படி, இலங்கையின் முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 7.2 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, உணவுப் பிரிவின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் ஜூலையில் 4.9 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் 6.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேவேளை, உணவு சாராப் பிரிவின் பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் 9.3 சதவீதமாகச் சற்று அதிகரித்துள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes