General21 September 2026

திருகோணமலை கடற்படை முகாமில் பெண்கள் காணாமல்போன வழக்கு: முன்னாள் பெண் கடற்படை வீராங்கனைகள் 2 பேருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமைந்திருந்த தடுப்பு முகாமில் இருந்து 2008ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் பெண் கடற்படை உறுப்பினர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இரு பெண் கடற்படை உறுப்பினர்களும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes