General21 September 2026

இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!

மாத்தறை - வல்கம பகுதியில் 21 கிலோகிராம் "ஐஸ்" ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes