முன்னாள் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளரும், ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி அதிகாரியுமான லியனாரச்சிகே சுமதிபால லியனாரச்சி என்பவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பொஸ்பரைட், இரசாயன நிறுவனத்தினால் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பரைட் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொடுத்தமைக்கும், அதற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள உதவியமைக்கும் பதிலாக, அந்த நிறுவனங்களிடம் இருந்து 81 இலட்சம் ரூபாய் கையூட்டலாக கோரி பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவளித்து உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், லியனாரச்சிகே சுமதிபால கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Latest News
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
22 September 2026
கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்
Local
22 September 2026
இலங்கை – கட்டார் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கவனம்!
Local
22 September 2026
யாழ். செம்மணி ஏ9 வீதியில் கொடூர விபத்து : சிற்றூந்து - டிப்பர் மோதி மூவர் படுகாயம்!
Local
22 September 2026
இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க பொது மன்னிப்பு வழங்குக: இலங்கை ஊடக அமைப்புகள் கூட்டுக் கோரிக்கை!
Local
22 September 2026
அப்புத்தளையில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை!
Local
22 September 2026
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தில் சில சரத்துகள் அரசியலமைப்பு முரணானது என அறிவிப்பு!
Local
22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்
Local
22 September 2026