Top Story
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய ஆயத்தினால் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட 24 பேரில், 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏனைய 9 பேரும் இந்த வழக்கில் இருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபரங்களுக்கு
General22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிக்கப்பட்டனர்
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

General 23 September 2026
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

General 23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

General 23 September 2026
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

General 23 September 2026
அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!

General 23 September 2026
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பு!

General 23 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பு!
International News

மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி

International 23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!

International 23 September 2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!

ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!

International 22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!

தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!

International 22 September 2026
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!

துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!

International 22 September 2026
துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!

திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

International 22 September 2026
திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

International 22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

International 22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

International 22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

International 22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

International 22 September 2026
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

International 21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

International 21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

International 21 September 2026
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!

International 21 September 2026
அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!
More News
General23 September 2026

உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க சபை கோரியுள்ளது.அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், எதிர்காலத்தில் இத்தகைய பாரிய குற்றச் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
General23 September 2026

வெலிகம அஞ்சல் நிலையத்தில் ரூ. 21 இலட்சம் மாயம்? – அஞ்சல் திணைக்களம் விசாரணை

வெலிகம நகரிலுள்ள பிரதான அஞ்சல் நிலையத்தின் வருடாந்த கணக்காய்வின்போது, சுமார் 21 இலட்சம் ரூபாய் பணம் கணக்கில் இடம்பெறாதது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிகம பிரதான அஞ்சல் நிலையத்தின் கீழ் 17 உப அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருவதுடன், கடிதப் பரிமாற்றம், பொருட்களை அனுப்புதல், வாகன அபராதம் செலுத்துதல், முதியோர் கொடுப்பனவு மற்றும் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த அஞ்சல் நிலைய வலையமைப்பின் ஊடாக தினசரி வருமானமாக 30 முதல் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அஞ்சல் நிலையத்தின் வருமானம் மற்றும் செலவுகள் தினசரி முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பிரதான அஞ்சல் நிலையத்தில் அதிகபட்சமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கையிருப்பாக வைத்திருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.இதற்கு மேலதிகமாகக் கிடைக்கும் பணம் தினசரி வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டிய நிலையில், அவ்வாறு வைப்பிலிடப்பட வேண்டிய பணம் முறையாகக் கையாளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், வருடாந்த கணக்காய்வின்போது 21 இலட்சம் ரூபாய் தொடர்பில் ஏற்பட்ட கணக்கு முரண்பாடு குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த விடயம் தொடர்பாக வெலிகம பிரதான அஞ்சல் நிலையத்தின் தற்போதைய அஞ்சல் நிலைய அதிபரிடம் தொலைபேசி ஊடாக வினவியபோது, உரிய அனுமதியின்றி இது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
வெலிகம அஞ்சல் நிலையத்தில் ரூ. 21 இலட்சம் மாயம்? – அஞ்சல் திணைக்களம் விசாரணை
General23 September 2026

நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

விபரங்களுக்கு
நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை
General23 September 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தண்டனை: தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சதித்திட்டம் தீட்டிய மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் திருப்தியடைவதாக கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த வழக்கின் தீர்ப்புக்காக பாதிக்கப்பட்டவர்கள் காத்திருந்ததாகவும், உயிரிழந்த தங்களது பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்காக அவர்கள் நீதியை எதிர்பார்த்ததாகவும் கத்தோலிக்க சபை குறிப்பிட்டுள்ளது.எனவே, பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தாம் திருப்தியடைவதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு அப்பால், இந்தத் தாக்குதலை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற முயன்றதாக கூறப்படும் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகளுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், இந்த விடயம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தண்டனை: தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?
General23 September 2026

IMF உடனான 7ஆவது மீளாய்வு பேச்சுவார்த்தை நிறைவு: இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான மதிப்பீடு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஏழாவது மீளாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான நான்காவது சரத்து ஆலோசனை தொடர்பில், சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். ஏழாவது மீளாய்வை நிறைவு செய்வதற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் அளவுகோல்கள் தொடர்பில் உடன்பாட்டை எட்டும் நோக்கில், எதிர்வரும் காலப்பகுதியில் பேச்சுவார்த்தைகள் தொடரும் என அந்த நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் வலுவான மீட்சியை வெளிப்படுத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், தொடர்ந்து 11 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது. எனினும், மத்திய கிழக்குப் போரின் கால அளவு மற்றும் தீவிரம் குறித்த நிச்சயமற்ற நிலை, உலகளாவிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் எல் நினோவின் தாக்கம் உள்ளிட்ட காரணிகளால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எதிர்மறையான அபாயங்கள் தொடர்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விலை அதிர்ச்சியின் காரணமாக இலங்கையின் பணவீக்கம் எட்டு சதவீதமாக அதிகரித்துள்ள போதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. வங்கிகள் போதுமான மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், இலாபகரமாகவும் இயங்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடுத்தர கால மூலோபாயத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது, வரி வசூல் முறையை மேம்படுத்துவது, வரி அடித்தளத்தை விரிவுபடுத்துவது மற்றும் வரி விலக்குகள் மற்றும் சலுகைகளை மறுசீரமைப்பது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அரச நிறுவனங்களால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்களைக் குறைப்பதற்காக எரிசக்தி விலையை செலவு மீட்பு அடிப்படையில் தொடர்ந்து பேணுவது முக்கியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மூலதனச் செலவினங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தடைகளை நீக்குவதுடன், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பணவீக்க இலக்கீட்டு கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ஐந்து சதவீத பணவீக்க இலக்கையும், அதற்கான பொறுப்புக்கூறல் வரம்பையும் தொடர்ந்து பேணுவது பொருத்தமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. குறைந்த மற்றும் நிலையான பணவீக்கத்தைப் பேணுவதற்கான சாதனை உருவாக்கப்பட்ட பின்னர், அடுத்த மீளாய்வின்போது குறைந்த பணவீக்க இலக்கை நோக்கி நகர்வது குறித்து பரிசீலிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அண்மையில் முன்வைக்கப்பட்ட சட்டத் திருத்தங்களில் சில பிரிவுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலவீனப்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியக் குழு யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து வடக்கு மாகாணத்தின் பொருளாதார ஆற்றல் குறித்து ஆராய்ந்துள்ளது. விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த சர்வதேச நாணய நிதியக் குழுவுக்கு எவன் பப்பஜியோர்ஜியோ (Evan Papageorgio) தலைமை தாங்கினார். ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அரசாங்க மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. ஏழாவது மீளாய்வை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை விரைவில் எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் இவான் பபகியோர்ஜியோ (Evan Papageorgio) தலைமையிலான குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுவதற்கு அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக, கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் சொத்து பிரகடனத் தகவல்களில், தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு இடையில் சமநிலையை பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
IMF உடனான 7ஆவது மீளாய்வு பேச்சுவார்த்தை நிறைவு: இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான மதிப்பீடு!
International News

மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி

International 23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!

International 23 September 2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!

ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!

International 22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!

தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!

International 22 September 2026
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!

துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!

International 22 September 2026
துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!

திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

International 22 September 2026
திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

International 22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

International 22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

International 22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

International 22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

International 22 September 2026
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

International 21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

International 21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

International 21 September 2026
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!

International 21 September 2026
அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!
Sports Stories
Explore More
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு தொடரும் 'ஹிட் விக்கெட்' சரிவு: ஹிரு ஸ்போர்ட்ஸ் ஆய்வு தகவல்!

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு தொடரும் 'ஹிட் விக்கெட்' சரிவு: ஹிரு ஸ்போர்ட்ஸ் ஆய்வு தகவல்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட மட்டை விக்கெட்டில் பட்டு 'ஹிட் விக்கெட்' (Hit Wicket) முறையில் ஆட்டமிழப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். இருப்பினும், 2015 ஆம் ஆண்டில் பதிவான 44 ஹிட் விக்கெட் ஆட்டமிழப்புகளில், அதிகபட்சமாக இலங்கையைச் சேர்ந்த வீரர்களே 9 முறை இவ்வாறு ஆட்டமிழந்துள்ளதாக 'ஹிரு ஸ்போர்ட்ஸ்' பிரிவின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. மேலும், 2023 முதல் 2026 வரையான காலப்பகுதியில், ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் பதிவான மொத்த 15 ஹிட் விக்கெட் ஆட்டமிழப்புகளில், மூன்றில் ஒரு பங்கான 5 ஆட்டமிழப்புகளை இலங்கை வீரர்களே பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆட்டமிழந்த இலங்கை வீரர்களின் ஏஞ்சலோ மெத்யூஸ் (2024), சதீர சமரவிக்ரம (2024), ஜனித் லியனகே (2025), துஷான் ஹேமந்த (2026), வனிந்து ஹசரங்க (2026) ஆகியோர் அடங்குவர். இதே காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஸிம்பாப்வே தலா 2 ஆட்டமிழப்புகளும் அவுஸ்திரேலியா, மேற்கத்திய தீவுகள், இந்தியா, பங்களாதேஷ் தலா 1 ஆட்டமிழப்புகளும் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா எந்தவொரு ஆட்டமிழப்பும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபரங்களுக்கு
இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.நிஷின் (Nisshin) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ஓட்டங்களை குவித்தது.இந்திய அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும் ஷஃபாலி வெர்மா 29 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றார்.

விபரங்களுக்கு
சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு : உணர்ச்சிபூர்வமாக அறிமுகமான சிறப்பு ஜெர்சி!

சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு : உணர்ச்சிபூர்வமாக அறிமுகமான சிறப்பு ஜெர்சி!

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி புவனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மொனுமென்டல் (Estadio Monumental) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியே அர்ஜென்டினா தேசிய அணிக்காக மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டியாக அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெஸ்ஸி தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் சிறப்பு ஜெர்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினாவின் பாரம்பரிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த ஜெர்சியில், மெஸ்ஸியின் பெயரும் 10ஆம் இலக்கமும் தங்க நிறத்தில் இடம்பெற்றுள்ளதுடன், பின்புறத்தில் அர்ஜென்டினாவின் அடையாளமான ‘மே மாத சூரியன்’ இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கடைசிப் போட்டி... வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஜெர்சி” என்ற கருத்துடன் மெஸ்ஸி இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சாமுடி பிரபோதா மற்றும் கவிஷா திலஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, தங்கம் வெல்வதற்கு இலங்கை மகளிர் அணிக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 17 ஆண்டுகளாகச் சென்னை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்த ஸ்டீபன் பிளெமிங் ஜூலை மாதத்துடன் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், ஐந்து முறை ஐ.பி.எல் செம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த புதிய நியமனத்தை அறிவித்துள்ளது.இந்தியாவின் 2011 உலகக் கிண்ண வெற்றி அணியில் இடம்பெற்றிருந்த ஷஹீர் கான், இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் பயிற்றுவிப்பாளர் மற்றும் கிரிக்கெட் முகாமையாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராகவும் பின்னர் உலகளாவிய கிரிக்கெட் அபிவிருத்தித் தலைவராகவும் பணியாற்றிய அவர், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராகவும் (Mentor) செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
24 H பார்சிலோனா கார் பந்தயம்: அஜித்தின் ‘RedAnt Racing’ அணி 2 ஆம் இடம்  பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது!

24 H பார்சிலோனா கார் பந்தயம்: அஜித்தின் ‘RedAnt Racing’ அணி 2 ஆம் இடம் பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது!

ஸ்பெயினில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர பார்சிலோனா (24H Barcelona) கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ மற்றும் ‘ரெட் ஆன்ட் ரேசிங்’ (RedAnt Racing) கூட்டு அணி 2 ஆம் இடத்தை பிடித்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐரோப்பிய எண்டூரன்ஸ் செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அஜித்குமாரின் பந்தய அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெற்றிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அரங்கில் இந்தியாவின் பெயரையும், தமிழ்நாட்டின் பெருமையையும் பன்னாட்டுச் சுவடுகளில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் இந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தனது காதலைத் தொடர்ந்து நிரூபித்து வரும் நடிகர் அஜித்குமாரின் இந்தச் சாதனைக்குத் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
டிசம்பரில் நடைபெறுகிறது ஐபிஎல் 2027 ஏலம்: மைதானம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!

டிசம்பரில் நடைபெறுகிறது ஐபிஎல் 2027 ஏலம்: மைதானம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!

2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான மினி ஏலம், (Mini Auction) எதிர்வரும் வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் ஏலம், மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துபாய், ஜெத்தா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் கடந்த பருவங்களின் ஏலங்கள் நடத்தப்பட்ட நிலையில், அணி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இந்தியாவிலேயே ஏலத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் விருந்தக வசதிகள் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகே ஏலம் நடைபெறும் நகரம் இறுதி செய்யப்படும். போட்டிகளில் 'இம்பேக்ட் பிளேயர்' (Impact Player) விதியைத் தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்த இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்னும் அறிவிக்கவில்லை. இது குறித்து விரைவில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

Dialog Axiata PLC, 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணிக்கு அனுசரணை வழங்கியுள்ளது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து, ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்த அனுசரணை வழங்கப்படுவதாக Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.பல தசாப்தங்களாக இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு ஆதரவளித்து வரும் Dialog Axiata PLC, 2028ஆம் ஆண்டு வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளராகவும் செயற்பட்டு வருகிறது.2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நீண்டகால இலக்காகக் கொண்டு, நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர், வீராங்கனைகள் பெறும் அனுபவங்கள், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கியமான ஒரு படியாக அமையும் என Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.மேலும், கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் மின்னணு விளையாட்டுகள் (Esports) ஆகிய தேசிய அணிகளின் பிரதான அனுசரணையாளராகவும் Dialog Axiata PLC செயற்பட்டு வருகிறது.தேசிய பரா விளையாட்டு விழா மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிகளுக்கும் நிறுவனம் ஆதரவு வழங்கி வருவதுடன், இலங்கை ஓபன் கோல்ஃப் போட்டி மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுத்துறைக்கும் பிரதான அனுசரணையை வழங்கி வருகிறது.அத்துடன், எதிர்காலத்தில் செம்பியன்களை உருவாக்கும் நோக்கில், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருகிறது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் பங்காளராக, 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!

சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!

1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே, சென்னையில் உள்ள ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்து தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்த ராதா, தமது வீட்டில் இருந்த காசோலை திருடப்பட்டு, அதனைப் பயன்படுத்தி அம்பிகா மற்றும் அவரது சகோதரர் 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அம்பிகா, ராதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என மறுத்துள்ளார்.மேலும், தமக்கு வழங்க வேண்டிய பணத்திற்காக ராதா வழங்கியதாகக் கூறப்படும் மூன்று காசோலைகளும், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பியதாக அம்பிகா தெரிவித்துள்ளார்.சொத்து தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ராதாவே அந்தக் காசோலைகளை வழங்கியதாகவும், பின்னர் அவற்றை வங்கியில் செலுத்த வேண்டாம் எனத் தடுத்ததாகவும் அம்பிகா கூறியுள்ளார்.ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்து தனது சொந்த உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ள அம்பிகா, அந்தச் சொத்தில் தனது பெயர் தனக்குத் தெரியாமல் நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், ராதாவுக்காக தான் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாகவும், தற்போது தம்மீது திருட்டுக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அம்பிகா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்! நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு – பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் பகிர்ந்த ரகசியம்

ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்! நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு – பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் பகிர்ந்த ரகசியம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான், உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டிருந்ததாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். ‘Honest Townhall’ நிகழ்ச்சியில் பேசிய தமன், ‘எந்திரன்’ திரைப்படத்துக்காக மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கும் திட்டம் இருந்ததாகவும், அதற்கான ஒப்பந்தப் பணிகள் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.எனினும், 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த இசைக் கூட்டணி நிறைவேறாமல் போனதாக தமன் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, 2009ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனை சந்தித்ததாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருந்தார்.அப்போது, இருவரும் இசை மற்றும் உலக அமைதி குறித்து கலந்துரையாடியதாகவும் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.மேலும், ‘We Are The World’ பாடலைப் போன்ற மற்றொரு பாடலை இணைந்து உருவாக்குவது குறித்து மைக்கேல் ஜாக்சன் தன்னிடம் பேசியதாகவும், பின்னர் இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் ஷங்கரிடம் தெரிவித்ததாகவும் ரஹ்மான் முன்னதாக கூறியிருந்தார்.மைக்கேல் ஜாக்சனின் மறைவால் இந்த முயற்சி நிறைவேறாமல் போன நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தகவலை இசையமைப்பாளர் தமன் தற்போது பகிர்ந்துள்ளார்.

விபரங்களுக்கு
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட அவுஸ்திரேலியா!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட அவுஸ்திரேலியா!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் என்பதால் உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் இளையராஜா மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இசைத்துறையில் இளையராஜா 50 ஆண்டுகளாக செய்த சிறப்பான பங்களிப்பைப் போற்றும் விதமாக, அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கான அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு அவுஸ்திரேலிய அரசிற்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அவுஸ்திரேலியாவில் இளையராஜாவுக்குக் கிடைத்த இந்த மரியாதையை அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பாபா' முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பாபா' முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்தின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்புற சுவரில், அவரது அடையாளமாக திகழும் 'பாபா' முத்திரை சின்னம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு வெளியான 'பாபா' திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இந்த அபான முத்திரை (Apana Mudra) சின்னம், ரஜினிகாந்தின் ஆன்மீக அடையாளமாகவும் ரசிகர்களின் விருப்பமான குறியீடாகவும் இருந்து வருகிறது. தற்போது அவரது வீட்டின் நுழைவு வாயிலின் முகப்பில் பெரிய அளவிலான இந்த 'பாபா' முத்திரை பொறிக்கப்பட்டுள்ள நிழற்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புதிய மாற்றம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்

கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராக்கா படத்திற்காக உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், ராக்கா திரைப்படம் ஒரு கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. திரைப்படத் தயாரிப்பில் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நிகழ்நேர மோஷன் - கேப்சர் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்தது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென 37 நடிகர்களின் அசைவுகள் நிகழ்நேர மோஷன் - கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்டது. மோஷன் - கேப்சர் என்பது நடிகர்களின் உடல் அசைவுகள் மற்றும் முகப் பாவனைகளைச் சிறப்பு சென்சார்கள் மற்றும் கெமராக்கள் மூலம் கணினியில் டிஜிட்டல் கதாபாத்திரங்களாக மாற்றும் அதிநவீன தொழில்நுட்பம். வழக்கமாக மோஷன் - கேப்சர் தொழில்நுட்பத்தில் ஒரு சில நடிகர்களை மட்டுமே ஒரே நேரத்தில் படம்பிடித்துள்ள நிலையில், ராக்கா திரைப்படத்தில் 37 பேர் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டது உலகத் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணைந்து பெற்றுக்கொண்டனர்.

விபரங்களுக்கு
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!

திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!

திருமணத்திற்குப் பிறகும் தனது வாழ்க்கையில் எந்தவொரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்றும், சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டதால், தனது கலைப் பயணம் எப்போதும் போல வழக்கம் போல் தொடர்வதாக நடிகை ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். நண்பர்களாக அறிமுகமான தானும் விஜய் தேவர்கொண்டாவும் தற்போது தம்பதிகளாக (ஜோடிகளாக) வாழ்கிறோம் என்று கூறியுள்ள அவர், விஜய் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய குணமுடையவர் என்றும், தனது தொழில் மற்றும் வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருவதன் காரணமாக, தமக்கு நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதற்கு நேரம் கிடைப்பதாக அவர் அந்தப் நேர்காணலில் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
கோடியில் சதமடித்தார் சூரி: வசூல் வேட்டை நடத்தும் மண்டாடி

கோடியில் சதமடித்தார் சூரி: வசூல் வேட்டை நடத்தும் மண்டாடி

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "மண்டாடி". இந்த திரைப்படம் இராமநாதபுரம் கடற்றொழிலாளர்களின் வாழ்வியலையும், அவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த செப். 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான “மண்டாடி” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விபரங்களுக்கு
ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!

ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!

சுமார் 46 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) அளவிலான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பிரபல நடிகையான ராதா, குறித்த முறைப்பாட்டை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது முறைப்பாட்டில், சுமார் 46 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா உள்ளிட்டோருக்கு எதிராக அளித்துள்ள இந்த முறைப்பாடு திரையுலகிலும் பொதுவெளியிலும் கவனம் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////