வியட்நாமின் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவை நோக்கிப் பயணித்த வியட்ஜெட் (VietJet) ஏர்லைன்ஸ் வானுார்தி, நடுவானில் ஏற்பட்ட இயந்திரம் பிரச்சினை காரணமாகச் சென்னை சர்வதேசவானுர்தி நிலையத்தில் நேற்று இரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
வியட்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த 'ஏர்பஸ் V320' (VJC1875) ரக வானுார்தியில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 143 பேர் பயணித்தனர்.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது வானுார்தியின் ஒரு இயந்திரத்தில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுச் செயல்படாமல் போனது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக வானுார்தியை சென்னைக்குத் திருப்பிவிடக் கட்டுப்பாட்டு அறை அனுமதி அளித்தது.
வானுார்தி தரையிறங்குவதற்காகச் சென்னை வானுார்தி நிலையத்தில் இரவு 9.55 அளவில் 'முழு அவசர நிலை' அறிவிக்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர சேவை நோயாளர் காவு வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டன.
எனினும், அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க, இரவு 10.27 க்குச் சென்னை வானுார்தி நிலையத்தில், குறித்த வானுார்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இதனையடுத்து வானுார்தியில் இருந்த 143 பயணிகளும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
Latest News
இலங்கையின் 5% பணவீக்க இலக்கை தொடருமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை
Local
23 September 2026
நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று விசாரணைக்கு
Local
23 September 2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!
Local
23 September 2026
சட்டவிரோத நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
Local
23 September 2026
24.8 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் கைது
Local
23 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி: மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
23 September 2026
ரூ. 40 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: தம்பதி மீது சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை
Local
23 September 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது
Local
23 September 2026
வியட்நாமில் இருந்து கொழும்புக்கு பயணித்த வானுார்தி இயந்திரத்தில் பிரச்சினை- சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!
Local
23 September 2026