சட்டவிரோதமாகப் பண வைப்புகளை ஏற்றுக்கொண்டமை மற்றும் நிதித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை முடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 44ஆம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுகள், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டு நீடிக்கப்பட்டுள்ளன.
இதில், இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக நிதிச் சட்டச் சட்டத்தின் 42ஆம் பிரிவின் கீழ் தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மற்றைய 4 நிறுவனங்களும் நிதிச் சட்டத்தின் 2ஆம் பிரிவை மீறிச் சட்டவிரோதமாக நிதித் தொழிலை நடத்தியுள்ளமை மற்றும் பொதுமக்களிடம் இருந்து பண வைப்புகளை ஏற்றுக்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், வங்கிகள் அல்லது நிதிச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அல்லது முறைப்படி அனுமதிக்கப்பட்ட சட்டப்பூர்வ நிறுவனங்களில் மட்டுமே பணத்தை வைப்பு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Latest News
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட அவுஸ்திரேலியா!
Local
23 September 2026
இலங்கை ஏற்றுமதித் துறையின் அதிரடி வளர்ச்சி - சர்வதேச சந்தையில் இலங்கைக்கு பலமான இடம்
Local
23 September 2026
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
Local
23 September 2026
வெலிகம அஞ்சல் நிலையத்தில் ரூ. 21 இலட்சம் மாயம்? – அஞ்சல் திணைக்களம் விசாரணை
Local
23 September 2026
நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தண்டனை: தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?
Local
23 September 2026
IMF உடனான 7ஆவது மீளாய்வு பேச்சுவார்த்தை நிறைவு: இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான மதிப்பீடு!
Local
23 September 2026
இந்தியா – இலங்கை உறவுகள்: இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய முடிவு
Local
23 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய டிஜிட்டல் முறைமை நாளை முதல் அறிமுகம்!
Local
23 September 2026