General23 September 2026

இந்தியா – இலங்கை உறவுகள்: இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய முடிவு

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான வரைவு அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
             
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான இந்தக் குழு, “இந்தியா–இலங்கை உறவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்” என்ற தலைப்பிலான அறிக்கை குறித்து விரிவாக கலந்துரையாடிய பின்னர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சசி தரூர், அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.

இந்தியா–இலங்கை உறவுகள் தொடர்பில் இந்த அறிக்கை விரிவான மதிப்பீட்டை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்தியா–இலங்கை உறவுகள் குறித்த அறிக்கைக்கு மேலதிகமாக, உலகளாவிய தொழில்நுட்ப இராஜதந்திரம், டிஜிட்டல் நிர்வாகம், செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி இராஜதந்திரம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் தொடர்பான 3 அறிக்கைகளும் இதன்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் நிலையில், இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes