உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், அதன் முழுமையான சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, உலக சந்தை விலை உயர்வால் ஏற்படும் அழுத்தத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு மாதமும் இறுதியில் எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய நிலவரம் குறித்த தகவல்கள் இன்று மக்களுக்கு அறியத்தரப்படும் என்றார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ள போதிலும், அதன் முழுமையான தாக்கத்தை இலங்கையிலுள்ள நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என அவர் வலியுறுத்தினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வின் போது கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களிலும் அரசாங்கம் இவ்வாறே சுமையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், எரிபொருள் நுகர்வோர் மீது இந்த முழுச் சுமையையும் சுமத்தாமல், அதில் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்," என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Latest News
அனோஜனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
Local
24 September 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
Local
24 September 2026
அவுஸ்திரேலிய அரசின் Medicare தளத்திற்குள் OpenAI-ன் AI Agent ஊடுருவல் : விசாரணைகள் தீவிரம்!
Local
24 September 2026
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் போராட்டம் - கடும் போக்குவரத்து நெரிசல்
Local
24 September 2026
"ஒரு பக்கம் அப்பா படம், மறுபக்கம் அஜித் சேர் படம்..." : இரகசியம் உடைத்த ஜேசன் சஞ்சய்!
Local
24 September 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : மீண்டும் உலக சந்தையில் சடுதியாக சரிந்த விலை!
Local
24 September 2026
திடீரென குறைந்த மசகு எண்ணெய் விலை : மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திற்கு மத்தியிலும் திடீர் மாற்றம்!
Local
24 September 2026
கித்துல்கலவில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு : ஒருவர் மாயம்!
Local
24 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் ஆரம்பம்!
Local
24 September 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026