General23 September 2026

அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், இலங்கையின் முன்னணி இந்து அமைப்புகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்குச் சென்று, அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தினர்.

சமூக ஊடகப் பதிவு தொடர்பான வழக்கில் சவூதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி, ஜம்இய்யா சார்பில் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்குமாறு இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes