Entertainment28 July 2026

படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் அவரது மகனான இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஆகிய இருவரின் பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன.

கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குநர் பாபு சிவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வேட்டைக்காரன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பெற்ற பாடல் ஒன்றில், விஜய்யுடன் சேர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சயும் நடனமாடியிருந்தார்.

'வேட்டைக்காரன்' படப்பிடிப்பு தளத்தில் (Sets) விஜய்யுடன் சிறுவனாக இருந்த ஜேசன் சஞ்சய் இருக்கும் பிரத்யேகப் புகைப்படங்களே தற்போது மீண்டும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் 'சிக்மா' (Sigma) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

'சிக்மா' திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes