Entertainment31 July 2026

இந்தியாவில் ஹொலிவுட் சாதனையைத் தகர்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ! - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம், இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த ஹொலிவுட் திரைப்படம் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் டாம் ஹாலண்ட், செண்டயா, சேடி சிங் மற்றும் மார்க் ரஃபலோ உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இது மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 38 ஆவது திரைப்படமாகவும், ஸ்பைடர்மேன் வரிசையின் 4 ஆவது பாகமாகவும் அமைந்துள்ளது.

இந்தியாவில் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே இந்த திரைப்படம் சுமார் 72.44 கோடி இந்திய ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் முதல் நாளில் ஈட்டிய 60 கோடி ரூபாய் வசூலே சாதனையாக இருந்த நிலையில், அதனை ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ தாராளமாக முறியடித்துள்ளது.

அத்துடன், பொலிவுட் முன்னணி நடிகர்களான ஷாருக்கானின் ‘பதான்’ மற்றும் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ ஆகிய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளையும் இந்த திரைப்படம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes