தான் எவ்வளவு வளர்ந்தாலும், தனது தாயார் இன்றும் தன்னை ஒரு குழந்தையாகவே பார்ப்பதாக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய், தனது தாயார் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
“நான் எவ்வளவு வளர்ந்தாலும், என் அம்மா இன்றும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார். தற்போது வேலை காரணமாக மிகவும் பிஸியாக இருப்பதால், முன்புபோல் அம்மாவுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை.
இருப்பினும், அவர் தொடர்ந்து எனது நலனை விசாரிப்பதுடன், வேலையில் சோர்வடையும் நேரங்களில் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவார்.
மேலும், சினிமா தொடர்பான விடயங்களில் என் அம்மாவின் கருத்துகளையும் விமர்சனங்களையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
எனது புதிய படத்தைப் பார்த்த பிறகு அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
கிரிஷ் பரிவர்த்தனை விவகாரம் – நிஸ்ஸங்க சேனாதிபதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
11 August 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறி: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
11 August 2026
வாகன விபத்தில் தாயும் மகனும் பலி; ஒன்றரை வயது குழந்தை காயம்
Local
11 August 2026
கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது
Local
11 August 2026
சிறுவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்ட வானூர்தி - தீவிரமடையும் விவாதம் !
Local
11 August 2026
ஜனாதிபதி - சட்டத்தரணிகள் சங்கம் இடையே நாளை விசேட பேச்சுவார்த்தை!
Local
11 August 2026
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மாஸ் கூட்டணி: அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா இணைந்து நடிக்கும் புதிய படம்!
Local
11 August 2026
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு
Local
11 August 2026
இரத்மலானை சைமா உள்ளிட்ட மூவர் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை
Local
11 August 2026
கிறிஸ் கெய்லின் துடுப்பாட்ட மட்டை குறித்து இந்திய வீரரின் சுவாரஸ்ய தகவல்!
Local
11 August 2026