Entertainment13 August 2026

டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக, இயக்குநர் வம்சி இயக்கும் பொலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘Hi’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டொக்சிக்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

திரைப்பட விளம்பர நிகழ்வுகளில் பெரிதாகப் பங்கேற்காத நயன்தாரா, இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிகழ்வில் நயன்தாரா அணிந்திருந்த ஆரஞ்சு நிறப் புடவை மற்றும் அணிகலன்களும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

அவர் அணிந்திருந்த புடவையின் விலை இந்திய மதிப்பில் சுமார் 22,900 ரூபாய் என்றும், பிரேஸ்லெட்டின் விலை சுமார் 23 இலட்சம் ரூபாய் என்றும், மோதிரத்தின் விலை சுமார் 6.25 இலட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நயன்தாரா அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்களின் மொத்த மதிப்பு சுமார் 29 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes