Entertainment02 September 2026

"நல்ல குணம் OK... ஆனால் உயரம் போதாது - திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் காரணத்தால் சர்ச்சை

நல்ல குணம் மற்றும் பண்புகள் இருந்தும், உயரம் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டு நபர் ஒருவரைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

X தளத்தில் பதிவிட்டுள்ள குறித்த பெண், "நேற்று நான் ஒருவரை நிராகரித்தேன், ஏனெனில் அவர் என் விருப்பத்திற்கேற்ப உயரமாக இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் வேறு எந்தக் குறையும் இல்லை, அவர் கனிவாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்ட போதிலும், உடல் ரீதியான ஈர்ப்பும் முக்கியம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

இணையத்தில் வைரலான இந்தப் பதிவிற்குப் பயனர்கள் கலவையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 'குணத்தை விட உருவம் முக்கியமில்லை' என்றும், 'ஈர்ப்பு இல்லாத உறவு நிலைக்காது' என்றும் இருவேறாக விவாதித்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes