Sports25 June 2026

ஸ்கொட்லாந்தை 3 - 0 என வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி

கால்பந்து கிண்ணத் தொடரின் 'C' குழுவுக்கான லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோற்கடித்துள்ளது.

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியிலேயே பிரேசில் அணி 2 - 0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் ராயனின் (Rayan) உதவியுடன் பிரேசில் அணியின் வினிசியஸ் ஜூனியர் (Vinícius Júnior) முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45'+3 நிமிடத்தில்) புரூனோ குய்மரேஸின் (Bruno Guimarães) உதவியுடன் வினிசியஸ் ஜூனியர் தனது இரண்டாவது கோலையும் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், 60ஆவது நிமிடத்தில் புரூனோ குய்மரேஸின் (Bruno Guimarães) மற்றுமொரு உதவியுடன் பிரேசில் அணியின் மத்தேயுஸ் குன்ஹா (Matheus Cunha) மூன்றாவது கோலை அடித்து அணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தினார்.

ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Related recommendation
Hiru TV News | Programmes