Sports02 July 2026

ரொனால்டோ அல்லது லூகா மோட்ரிக்: கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் களத்தில் நாளைய போட்டி யாருடைய இறுதிப்போட்டியாக இருக்கலாம்?

2026 கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரின் 32 ஆவது சுற்றில் நாளை போர்த்துக்கல் மற்றும் குரோசியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவொரு வெளியேற்றுச் சுற்று என்பதால், இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.

இந்தநிலையில் இரண்டு அணிகளிலும் விளையாடும் உலகின் இரு பெரும் நட்சத்திரங்களான போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் குரோசியா அணியின் லூகா மோட்ரிக் ஆகியோர் 40 வயதைக் கடந்துள்ளனர்.

எனினும் இருவரில் எவரும் இன்னும் சர்வதேச போட்டி ஓய்வை அறிவிக்கவில்லை.

இருந்தபோதிலும் இருவரில் ஒருவருக்கு நாளைய போட்டி கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் இறுதி போட்டியாக அமையும் என்று எதிர்பார்ப்புக்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதன்படி, தோல்வியடையும் அணி கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரை விட்டு வெளியேறும் என்பதால், தோற்கும் அணியின் தலைவருக்கு இதுவே கடைசி கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

எனவே இது கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த முக்கியத்துவம் வாய்ந்தப்போட்டி கனேடிய டொராண்டோ மைதானத்தில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.30க்கு ஆரம்பமாகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes