Sports08 July 2026

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடையை இ சர்வதேச ஒலிம்பிக் குழு தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இது லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாகஇ ரஷ்யா மீண்டும் ஒலிம்பிக் அரங்கில் இணைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக கருதப்படுகிறது.

2022 பெப்ரவரியில் ரஷ்யா, யுக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து யுக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளான லுஹான்ஸ்க்இ டொனெட்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியாவில் பிராந்திய ஒலிம்பிக் மன்றங்களை அங்கீகரித்ததற்காக ஒக்டோபர் 2023-ல் ரஷ்ய ஒலிம்பிக் குழு இடைநீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிர்வாகக் குழு அந்தத் தடையை நீக்கியுள்ளது.

இதன் மூலம் லொஸ் ஏஞ்சல்ஸ் 28 ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் உட்பட பல சர்வதேசப் போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

எனினும்இ விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா தனது கொடியையும் வண்ணங்களையும் காட்சிப்படுத்தலாமா அல்லது அதன் தேசிய கீதத்தை இசைக்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes