இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோஸ் பட்லர் 131 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 95 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சிவம் துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் 258 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் இஷான் கிஷன் 56 ஓட்டங்களையும், திலக் வர்மா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் சேம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 4-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
டி20 தொடரை 4-0 என வென்றது இங்கிலாந்து! இந்தியாவுக்கு ஏமாற்றம்
Local
12 July 2026
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!
Local
12 July 2026
நோர்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
Local
12 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
12 July 2026
பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி
Local
12 July 2026
கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை: பிரதமர் கருத்து!
Local
12 July 2026
2050இல் 35 மில்லியன் பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள்: உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!
Local
12 July 2026
முதல் கிரேண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நோஸ்கோவா
Local
12 July 2026
பயனர் தரவு பாதுகாப்பு சர்ச்சை - instagramஇன் வசதி திடீர் நீக்கம்!
Local
12 July 2026
ICC Hall of Fame பட்டியல் - உச்சகட்ட கௌரவத்தை பெற்ற 3 நட்சத்திரங்கள்!
Local
12 July 2026