இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், துடுப்பாட்ட வீரர் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்வதற்காக, களத்தடுப்பு வீரர் ஒருவர் விரல் சொடுக்கிய விவகாரம் குறித்து லீக் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நோர்த் யோர்க்ஷயர் மற்றும் சவுத் டர்ஹாம் கிரிக்கெட் லீக்கின் இரண்டாம் பிரிவுப் போட்டியில் சால்ட்பேர்ன் மற்றும் நோர்டன் அணிகள் அண்மையில் மோதின.
இந்தப்போட்டியின் போது, பந்து துடுப்பாட்ட வீரரின் மட்டையைக் கடந்து செல்லும் வேளையில், சால்ட்பேர்ன் அணியின், களத்தடுப்பு வீரர் ஒருவர் வேண்டுமென்றே தனது விரல்களைச் சொடுக்கி, பந்து மட்டையில் பட்டது போன்ற ஒலியை எழுப்பியுள்ளார்.
இந்த ஒலியை கருத்திற்கொண்டு நடுவர், துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முறையான முறைப்பாடு தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும், முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்த் யார்க்ஷயர் மற்றும் சவுத் டர்ஹாம் கிரிக்கெட் லீக் உறுதிப்படுத்தியுள்ளது.
விசாரணையின் முடிவுகள் வரும் வரை வேறு எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாது எனவும் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சால்ட்பேர்ன் அணியின் முன்னைய போட்டிகளிலும் இதே போன்ற சில முறைகேடான சம்பவங்கள் நடந்துள்ளதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
Latest News
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
Local
30 July 2026
'ஜனநாயகன்' உலகளவில் ரூ.255 கோடிக்கும் மேல் வசூல் – 7 நாட்களில் புதிய சாதனை
Local
30 July 2026
நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Local
30 July 2026
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026
நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவடையும் தருவாயில்!
Local
30 July 2026