பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான நெய்மர், தேசிய அணிக்கான தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதன் மூலம் தேசிய அணியில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.
கோபா சவுத் அமெரிக்கா தொடரில் வெனிசுவேலாவின் யுனிவர்சிடாட் சென்ட்ரல் அணிக்கு எதிரான போட்டியில் சாண்டோஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதை அடுத்து, தனது 34 வயதில் நெய்மர் இந்த முடிவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நோர்வே அணியிடம் பிரேசில் தோற்று வெளியேறியதைத் தொடர்ந்து எழுந்த ஊகங்களுக்கு நெய்மரின் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தேசிய அணிக்கான தனது நேரம் முடிந்துவிட்டது, நான் வரலாற்றை படைத்திருக்கிறேன். அதேபோல சந்தோசமாக இருந்தேன் என்றும், நாட்டின் தேசிய அணிக்காக எப்போதும் தனது முழு ரத்தத்தையும், உயிரையும் கொடுத்துப் போராடியதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ள நெய்மர், பல உலகக் கிண்ணங்கள், கோபா அமெரிக்கா மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
தற்போது தனது கழக அணியான சாண்டோஸ் மீதான கவனத்தைத் திருப்பியுள்ள நெய்மர், இளம் வீரர்களைக் கடிந்து கொண்டதாக வெளிவந்த ஊடக செய்திகளையும் மறுத்துள்ளார்.
அணியின் தரத்தை உயர்த்தவே தான் அவ்வாறு பேசியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Latest News
காவல் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் சாஜண்ட் கைது!
Local
02 August 2026
சீரற்ற வானிலையால் 5 கடற்றொழிலாளர்கள் பலி; ஒருவரை காணவில்லை!
Local
02 August 2026
131 டெஸ்ட் போட்டிகள், 184 இன்னிங்ஸ்கள்: ஒருமுறை கூட ரன்-அவுட் ஆகாத கபில் தேவின் அசாத்திய சாதனை!
Local
02 August 2026
பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலைக் கைதிகளைப் பார்வையிட வியாழக்கிழமை முதல் மீண்டும் அனுமதி!
Local
02 August 2026
மீண்டும் களத்தில் லியோனல் மெஸ்ஸி - கைநழுவிய வெற்றி
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியா அணி மாற்றம்? வெளியான அதிரடி தகவல்!
Local
02 August 2026
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026
15 நாட்களுக்கு முன் நடந்த ரகசியம் வெளிவந்தது : விஜய் மகனை இழுத்துப் பேசிய ரவி மோகனின் மாமியார்!
Local
02 August 2026
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026