2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடரின் போது இடம்பெற்ற பல விதிமீறல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக, அர்ஜென்டினா காற்பந்து சங்கம் (AFA) மற்றும் வீரர்கள் மீது சர்வதேச காற்பந்து சம்மேளனம் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் “லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்” (“ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானது”) என்ற வாசகம் அடங்கிய பதாகையைக் காட்சிப்படுத்தினர்.
இதனையடுத்து,விளையாட்டு நிகழ்வுகளை விளையாட்டு அல்லாத அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒழுங்குமுறை விதியை இந்தச் செயல் மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி போட்டிகளின் போது பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டிகள் தாமதமாகத் தொடங்கப்பட்டமை, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் பொருட்களை வீசியமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்பெயின் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் 0-1 எனத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மைதானத்தில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாகவும் தனியாக ஒழுங்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
தங்கத்தின் விலையில் மாற்றம்
Local
02 August 2026
பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்துக் கிளம்பிய சர்ச்சை!
Local
02 August 2026
தோல்வியடைந்ததா சமூக ஊடகத் தடை? தடையை மீறும் சிறுவர்கள்
Local
02 August 2026
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
Local
02 August 2026
வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவல் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர அறிவிப்பு!
Local
02 August 2026
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
02 August 2026
மகன் சஞ்சய்க்கு விஜய் கொடுத்த அந்த ஒரு அறிவுரை!
Local
02 August 2026
பாகிஸ்தான் வீராங்கனையை கட்டியணைத்த ஜெமிமா - அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் - நாமல் குற்றச்சாட்டு!
Local
02 August 2026
பெருவில் சுற்றுலா வானூர்தி விபத்து - 13 பேர் உயிரிழப்பு
Local
02 August 2026