ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது முகவருமான ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) தனது 68 ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், ஆர்ஜென்டினாவின் ரொசாரியோ (Rosario) நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
லியோனல் மெஸ்ஸியின் மகத்தான கால்பந்து வாழ்க்கைக்குப் பின்னால் மிக முக்கிய தூணாக இருந்தவர் அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி ஆவார்.
சிறுவயதில் மெஸ்ஸி சந்தித்த வளர்ச்சி ஹோர்மோன் குறைபாட்டிற்கான சிகிச்சை செலவை ஏற்க அப்போதைய கால்பந்து கழகங்கள் முன்வராத போது, தைரியமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று மெஸ்ஸியின் திறமையை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமை இவரையே சாரும்.
கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி, பார்சிலோனா கழகத்தின் அப்போதைய விளையாட்டுப் பணிப்பாளர் கார்லஸ் ரெக்சாச்சுடன் (Carles Rexach) ஒரு பேப்பர் நெப்கினில் கைச்சாத்திடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமே மெஸ்ஸியை பார்சிலோனா கழகத்தின் மிகச்சிறந்த வீரராக மாற்ற வழிவகுத்தது.
தன் தந்தையின் மறைவால் துயருற்றுள்ள லியோனல் மெஸ்ஸிக்கும், தாய் செசிலியா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Latest News
அவுஸ்திரேலியாவில் ஐபோன் வடிவிலான இரகசிய துப்பாக்கிகள் பறிமுதல்
Local
13 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது திருத்தம் குறித்து கவலை: இலங்கைக்கு கடும் எச்சரிக்கையுடன் ஐநா கடிதம்!
Local
12 August 2026
துரந்தர் திரைப்படத்தின் வெற்றி: நடிகை சாரா அர்ஜுனுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள்!
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் - ஜனாதிபதி
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாய் உயிரிழப்பு
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்
Local
12 August 2026
குஜராத் அணிக்குத் திரும்ப ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனை – சுப்மன் கில்லிடம் ஆலோசனை கேட்ட நிர்வாகம்
Local
12 August 2026
7 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
12 August 2026
யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்
Local
12 August 2026
கிரிக்கெட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் ரஹானே!
Local
12 August 2026