இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுலாவின்; போது நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான ஃபர்வீஸ் மஹ்ரூஃப் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கை ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் முகமது சிராஜின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இலங்கையின் சுழற்பந்து வீச்சை இந்திய அணி இலகுவாகக் கருதக் கூடாது என மஹ்ரூஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி சர்வதேச மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரியவே, முதல் போட்டியின்போது, இலங்கை அணியின் பிரதான ஆயுதமாக இருப்பார் என மஹ்ரூஃப் தெரிவித்துள்ளார்.
காலி மைதானத்தில் வீசும் குறுக்குக் காற்றைப் பயன்படுத்திப் பந்தை எவ்வாறு சுழலச் செய்வது என்பதை பிரபாத் நன்றாக அறிந்து வைத்துள்ளார்.
இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் முதன்முறையாக காலி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால், மைதானத்தின் காற்று மற்றும் ஜயசூரியவின் துல்லியமான நீண்டநேரப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் மஹ்ரூஃப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், காலி மைதானத்தில் நடைபெற்றுள்ள 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளை பிரபாத் ஜயசூரிய வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026
சவுதி இளவரசர் - அமெரிக்க CENTCOM தளபதி சந்திப்பு: பிராந்திய பதற்றத்தை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை!
Local
14 August 2026
ஓமான் அருகே எண்ணெய் கசிவு: கெஷ்ம் தீவு கடலோரத்தில் மாசுபாடு என ஈரான் தகவல்!
Local
14 August 2026
யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!
Local
14 August 2026
5.3 வினாடிகளில் 800 கி.மீ வேகம்: சீன அதிவேக தொடருந்தின் சாதனை!
Local
14 August 2026
இலங்கை கடற்படையால் கைதான 9 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
Local
14 August 2026