சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக 21 வெற்றிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற போட்டியில் பின்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்தச் சாதனையை ஸ்பெயின் அணி எட்டியுள்ளது.
முன்னதாக, 2003 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 20 சர்வதேச வெற்றிகளைப் பெற்றதே உலக சாதனையாக இருந்தது.
தற்போது அந்தச் சாதனையை ஸ்பெயின் கிரிக்கெட் அணி முறியடித்துள்ளது.
ஸ்பெயின் அணி கடந்த மூன்று ஆண்டுகளாக இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காமல் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது.
இந்தத் தொடர் வெற்றிகள், 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றில் ஸ்பெயின் அணிக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 தரவரிசையில் 28 ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் அணியாகத் தன்னை நிரூபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
டிடிவி தினகரன் விமர்சனம்: "ரகுவரன் ஸ்டைலில் வில்லனாகத் தெரியும் விஜய்
Local
24 August 2026
2 ஆம் நாள் முடிவு: இலங்கை அணி தடுமாற்றம்; இந்தியா வலுவான நிலையில்!
Local
24 August 2026
2027 ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு
Local
24 August 2026
கால்வாயிலிருந்து இரண்டு வயதுக் குழந்தை உடலமாக மீட்பு
Local
24 August 2026
யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!
Local
24 August 2026
நீதிமன்றங்களின் சுயாதீனத்தில் தலையிட வேண்டாம் - அரசாங்கத்திற்கு நாமல் எச்சரிக்கை!
Local
24 August 2026
ரூ.2000 முதல் ரூ.10 கோடி வரை : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வேதன வளர்ச்சி!
Local
24 August 2026
இந்திய அணி 503 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது!
Local
24 August 2026
வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு : இரத்தம் போல் சிவக்கப்போகும் நிலவு - அறிவியல் காரணம் என்ன?
Local
24 August 2026
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு - அரச வருமானம் அதிகரிப்பு
Local
24 August 2026