கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்...

Wednesday, 04 September 2019 - 10:35

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...
ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 250 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி தற்போது மாதாந்தம் வழங்கப்படும் 500ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதியின் 68ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.