விண்வெளியில் மின்னிய அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் - நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் காட்சி!

Wednesday, 08 July 2026 - 15:51

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட வானவேடிக்கை காட்சிகளை சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) மூலம் நாசா பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஒளிப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள நாசா, "அமெரிக்காவின் 250 ஆண்டுகள் சுதந்திரக் கொண்டாட்டம் விண்வெளியிலிருந்தும் தென்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது.

நாசா வெளியிட்ட இந்த அரிய காட்சி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.