பிரதம நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தம்புத்தேகமவில் தனது 57வது கிளையை திறந்து வைத்தது, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அமைதியான நகரத்தினுள் தடம் பதித்து அதன் வலையமைப்பை மென்மேலும் விரிவுபடுத்தியது.
கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர்ஆனந்த செனவிரத்ன, சிரேஷ்ட நிர்வாகம் மற்றும் ஊழியர்கள், தம்புத்தேகம பிரதேச செயலாளர் சுமித் சோமரத்ன , காவல்துறை போக்குவரத்து அதிகாரி என்.ஏ. திலக்கரத்ன, கிராம சேவையாளர் ஏ.எம்.டீ.ஆர். அதிகாரி , வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ பத்மசிறி, அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் வட மத்திய மாகாணத்தில், அனுராதபுரத்திலிருந்து சுமார் 45 கிலோமீற்றர் தொலைவிலும் கொழும்பிலிருந்து 160 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள தம்புத்தேகம, வளமான மண் மற்றும் எல்லையற்ற தங்க நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது.
தொன்மையான கலாசார பாரம்பரியம் மற்றும் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியங்களின் மதிப்புகளுடன் உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன, இது பிராந்தியத்தின் பண்டைய வரலாற்றுடன் ஒன்றுபட்ட ஒரு சமூகத்தை பிரதிபலிக்கிறது
தம்புத்தேகமவின் பொருளாதார நிலப்பரப்பு, பிராந்தியத்தின் விவசாய முக்கியத்துவம் மற்றும் தலைமுறைகளாக நாட்டின் நெல் விளைச்சலுக்கு அளித்த பங்களிப்பை அடிப்படையாக கொண்டது.
16 முதல் 64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான தனிநபர்களின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான மக்கள்தொகையுடன், தொழிலாளர் தொகுப்பில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரின் வாழ்வாதாரம் விவசாய நடவடிக்கைகளை சுற்றியே உள்ளது.
இன்று, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தம்புத்தேகம பொருளாதார மையத்தால் உருவாக்கப்பட்ட ஏராளமான வாய்ப்புகளால் மேலும் பலப்படுத்தப்பட்டு, உள்ளூர்வாசிகள் தன்னிறைவு மற்றும் செழிப்பின் யதார்த்தத்தை கற்பனை செய்கிறார்கள்.
நிகழ்வில் பேசிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கூறுகையில், “ஒரு நிதி நிறுவனமாக, இவ்வளவு துடிப்பான உள்ளூர் சமூகத்தால் வரவேற்கப்படுவதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தம்புத்தேகம கிராமப்புற வசீகரத்திற்கும் நவீன முன்னேற்றங்களுக்கும் இடையிலான இணக்கமான ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது.
தேசிய அளவில் ஒரு முக்கிய விவசாய மையமாக வளர்ச்சியடைவதில் இந்தப் பகுதி பெரும் ஆற்றலைக் காட்டுகிறது. தனிநபர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் நம்பகமான நிதி ஆதரவிற்கான வளர்ந்து வரும் தேவையை கண்டுள்ளதால், சவால்களை தாண்டி முன்னோக்கிச் செல்ல ஒரு படிக்கல்லை உருவாக்கவும், யாவரும் உயர்ந்த இலக்கை அடைய முடியும் என்பதை நினைவூட்டவும் இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துகிறோம்.” எனக் கூறினார்.
புதிய கிளை குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்கக்கடன் நிதி, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவு வரைவுகள் மற்றும் ஸ்மார்ட் பே பில் செலுத்தும் வசதி வரை பல்வேறு முழுமையான நிதி தீர்வுகளை வழங்குகிறது, இது பிராந்தியத்திற்குள் ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான ஆதரவு அமைப்பை உருவாக்கும்.
சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது.
ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள்; மூலம் 'A(LKa)' என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.
புதிய கிளையை தொடர்பு கொள்ள, 025 753 4805 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது இல. 17/S, ரஜின சந்தி, தம்புத்தேகம என்ற முகவரியில் உள்ள கிளைக்கு வாருங்கள். சியபத பினான்ஸ் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.siyapatha.lk இற்கு விஜயம் செய்யுங்கள்.









