இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்தவமனை ஒன்றில் தவறான ஊசி செலுத்தப்பட்டதால், பிறந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 5ஆம் திகதி பிறந்த இந்த குழந்தை, சில நாட்களுக்குப் பிறகு, உடல்நிலை மோசமடைந்ததால், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டது.
அங்கு மருத்துவர்கள் ஊசி மருந்து செலுத்திய பிறகு, குழந்தையின் கை வீக்கமடைந்து நீல நிறமாக மாறத் தொடங்கியதாகக் குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த போதும், குடும்பத்தினர் முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்ததே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
குழந்தையின் நிலை மிகவும் மோசமானபோது, குழந்தை வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
தற்போது அக்குழந்தையின் கையில் தீவிரமான தொற்று ஏற்பட்டு அழுகும் நிலைக்குச் சென்றுள்ளது. இதன் காரணமாக, குழந்தையின் கையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், குழந்தையின் தந்தை மருத்துவ அலட்சியம் தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.